கத்திகுத்தில் பெண் பலி

ஊறுபொக்க, மில்லமுல்லஹேன பகுதியில் மேற்கொள்ளப்பட்ட கத்தித் குத்து தாக்குதலில் உயிரிழந்த பெண் தொடர்பான மரண விசாரணைகள் இன்றைய தினம் முன்னெடுக்கப்படவுள்ளன.

நபர் ஒருவரால் மூன்று பெண்கள் மீது, கத்திக்குத்து தாக்குதல் ஒன்று நேற்றைய தினம் நடத்தப்பட்டிருந்தது.

இந்த தாக்குதலில் படுகாயமடைந்த மூன்று பெண்களும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலன் இன்றி அதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மில்லமுல்லஹேன பகுதியை சேர்ந்த 28 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, இந்த கொலை சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர், தாக்குதல் இடம்பெற்ற வீட்டுக்கு அருகில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

40 வயதுடைய ஒருவரே இவ்வாறு சடலமான மீட்கப்பட்டுள்ளதாகவும், குறித்த நபர் மனநிலை பாதிக்கப்பட்டவர் என்றும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த கத்திகுத்து சம்பவத்துக்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படவில்லை என்றும் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]