கதிர்காம பிரதேசசபை தவிசாளர் உள்ளிட்ட நால்வருக்கு விளக்கமறியல்

கதிர்காம பிரதேசசபை தவிசாளர் ஜானக்க அமில ரங்கன உள்ளிட்ட நால்வர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

திஸ்ஸமகராம நீதவான் நீதிமன்றத்தில் இன்று முன்னிலையானதையடுத்து, மே மாதம் 02ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜனவரி மாதம் பொலிஸ் நிலையத்தின் மீது தாக்குதல் மேற்கொண்ட சம்பவம் தொடர்பில் இவர்கள் கைதுசெய்யப்பட்டிருந்தனர்.

முன்னதாக, பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில், கதிர்காமம் பகுதியைச் சேர்ந்த பிரதேச சபை ஊழியர் உயிரிழந்திருந்தார்.

இந்த சம்பவத்துக்கு எதிர்ப்பு வெளியிட்டு பிரதேச மக்கள் இணைந்து கடந்த ஜனவரி மாதம் 20 ஆம் திகதி, கதிர்காமம் பொலிஸ் நிலையத்துக்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இதனால் அங்கு அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டதுடன், அதனுடன் தொடர்;புடைய பிரதேச சபை தவிசாளருக்கு எதிரான பிடியாணை பிறப்பிக்கப்பட்டது.

அதற்கமைய, குறித்த தவிசாளர் இன்றைய தினம் திஸ்ஸமகாராம நீதிமன்றில் இன்று முன்னிலையானதையடுத்து, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]