கதிர்காமத்திற்கான காட்டுப்பாதையில் பயணிக்கும் அடியார்களுக்கு முக்கிய அறிவித்தல்

கதிர்காமத்திற்கான காட்டுப்பாதை நாளைய தினம் மூடப்படுமென அம்பாறை மாவட்ட பதில் அரசாங்க அதிபர் கதிர்காமத்தம்பி விமலநாதன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கும் போது; கடந்த 4ஆம் திகதி இந்த காட்டுப்பாதை திறக்கப்பட்டது. அன்றிலிருந்து இன்றுவரை 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாத யாத்திரீகர்கள் இப்பாதையால் பயணித்துள்ளனர்.

ஒரேயோருவர் இடைநடுவில் மரணித்துள்ளார். ஏனையோர் காட்டு மிருகங்களின் எவ்வித தாக்கமும் இல்லாமல் கந்தனருளால் கதிர்காமம் போய் சேர்ந்துள்ளனர்.

கதிர்காம தீர்த்தோற்சவம் எதிர்வரும் 28ஆம் திகதி நடைபெறவிருப்பதால் இறுதியாக காட்டினூடாக பயணிக்கும் திகதி நாளையுடன் நிறைவடைகின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]