கண்பார்வையற்ற மாணவியின் கோரிக்கையை நிறைவேற்றிய ஜனாதிபதி

ஜனாதிபதி அவர்களிடம் ஆர்மோனியம் ஒன்றினை பெற்றுத்தருமாறு கோரிய ருவன்வெல்ல பிரதேசத்தைச் சேர்ந்த கண்பார்வையற்ற மாணவி சஞ்சவி நயனதாரா மற்றும் அவரது கண்பார்வையற்ற சகோதரன் கிம்ஹான நயனஜித் ஆகியோரின் கோரிக்கையை நேற்று (22) ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் நிறைவேற்றி வைத்தார்.

ஜனாதிபதி அவர்களின் பதவிக்காலத்தின் நான்காண்டு நிறைவை முன்னிட்டு கடந்த 12ஆம் திகதி ஜனாதிபதி அவர்களுக்கு ஆசீர்வாதம் வேண்டி ருவன்வெல்ல லெவன்கம சதானந்த பிரிவெனா விகாரையில் இடம்பெற்ற வைபவத்தில் கலந்துகொண்டபோது ஜனாதிபதி அவர்களின் அருகில் வந்த இந்த பிள்ளைகள் தமது கோரிக்கையை முன்வைத்தனர்.

இதன்போது அப்பிள்ளைகளுக்கு வழங்கிய வாக்குறுதிகளுக்கமைய புதிய ஆர்மோனியம் ஒன்றினையும் அவர்களது குடும்பத்தின் நலனுக்காக பத்து இலட்சம் ரூபாய் நிதி அன்பளிப்பையும் நேற்று (22) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் வைத்து ஜனாதிபதி அவர்கள் வழங்கினார்.

பிள்ளைகளின் பெற்றோருடன் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டி இந்நிகழ்வில் பங்குபற்றினார்.

கண்பார்வையற்ற கண்பார்வையற்ற

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]