கண்ணீர்மல்க 28 வருடங்களின் பின் தமது காணி களை பார்வையிட்ட வலிகாம மக்கள்!!

28 வருடங்களின் பின் மீள்குடியேற்றத்திற்காக அனு மதிக்கப்பட்ட வலிகாமம் வடக்கு மக்கள் தமது காணி களை ஆவலுடன் கண்ணீர்மல்க பார்வையிட்டனர்.

28 வருடங்களுக்கு முன் இராணுவ ஆக்கிரமிப்பினால் வலிகாமம் வடக்கு பகுதி இராணுவ கட்டுப்பாட்டு ப்பகுதியாக மாறியது.

பின்னர் இந்த பகுதி உயர் பாதுகாப்பு வலயமாக பிரகடனப்படுத்தப்பட்டதை தொடர்ந்து 28 வருடங்களாக வலிகாமம வடக்கு மக்கள் இடம்பெயர்ந்து 40ற்கும் மேற்பட்ட நலன்புரி முகாம்களிலும் உறவினர், நண்பர்கள் வீடிகளிலும் வாழ்ந்து வந்தனர். இந் நிலையில் உயர்பாதுகாப்பு வலயத்திற்குள்ளிருந்து 683 ஏக்கர் இன்று விடுவிக்கப்பட்டது. இந்நிலையில் நீண்டகாலத்தின் பின் காடுகளாக மாறி கிடக்கும் தங்கள் சொந்த நிலத்தை வலி வடக்கு மக்கள் ஆவலுடன் கண்ணீர் மல்க பார்வையிட்டனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]