கண்ட இடத்தில் தொட்டு சுகம் காணுகிறார்கள் சிணுங்கும் அனுபமா

கண்ட இடத்தில் தொட்டு சுகம் காணுகிறார்கள் சிணுங்கும் அனுபமா

கண்ட இடத்தில்

கொடி திரைப்படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் அனுபமா பரமேஸ்வரன்.

இவர் போக்குவரத்து செய்யும் போது பெண்களுக்கு ஏற்படும் அசெளகரியங்கள் குறித்து எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறியது “நான் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தபோது தினமும் ஹாஸ்டலிலிருந்து பஸ்ஸில்தான் கல்லூரிக்கு செல்வேன். கூட்ட நெரிசலை சாக்காக வைத்து சில இடி மன்னன்கள் பெண்களின் அருகில் நின்றுக்கொண்டு சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கண்ட இடத்தில் தொடுவது, இடிப்பது என்று சில்மிசம் செய்வார்கள்.” என தெரிவித்துள்ளார்.

கண்ட இடத்தில்

மேலும் “முட்டாள்தனமான அந்த செய்கையால் அவர்களுக்கு என்ன சுகம் கிடைத்துவிடுமோ எனக்கு தெரியவில்லை. ஒரு சில பஸ் கண்டக்டர்களும் இதுபோல் சில்மிசத்தில் ஈடுபடுவதுண்டு. அந்த நேரத்தில் நான் வெறுப்பாகி அவர்களை சத்தம் போட்டிருக்கிறேன்.

தரம் தாழ்ந்த எண்ணத்தோடு அவர்கள் ஏன் இப்படி செய்கிறார்கள் என்பதை பெண்களால் புரிந்துகொள்ள முடியும். இதுபோன்ற தரக்குறைவான செயல்களில் ஈடுபடுபவர்கள் தங்கள் வீட்டில் அம்மா, சகோதரி இருப்பதை நினைத்து பார்க்க வேண்டும். அவர்களிடம் வேறு யாராவது இப்படி நடந்துகொண்டால் இந்த இடிமன்னன்கள் சும்மா இருப்பார்களா?” என கோபத்துடன் கேள்வி எழுப்பியுள்ளார்.

கண்ட இடத்தில்

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]