கண்ட இடத்தில் கை வைத்ததாக புகார் எழுப்பி சர்ச்சையில் சிக்கிய பிரபல சீரியல் நடிகை- அவங்க யாரு தெரியுமா? புகைப்படம் உள்ளே

இந்தி தொலைக்காட்சி தொடரில் நடித்து வரும் நடிகையை சக நடிகர் கண்ட இடத்தில் தொட்டதாக புகார் எழுந்துள்ளது. பிரபல இந்தி தொலைக்காட்சி தொடரான டாயனில் நடித்து வருபவர் டீனா தத்தா. அந்த தொடரின் ஹீரோவான மோஹித் மல்ஹோத்ரா மீது பாலியல் புகார் எழுந்துள்ளது. தொடரில் டீனா மற்றும் மோஹித் இடையேயான நெருக்கமான காட்சியை ஷூட் செய்துள்ளனர்.

நெருக்கமான காட்சியில் நடிக்கும்போது மோஹித் டீனாவை கண்ட இடத்தில் தொட்டுள்ளார். இதனால் டீனா அங்கிருந்து அழுது கொண்டே வெளியே சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மோஹித்தோ டீனா அழுது கொண்டே சென்றதை பார்த்தும் எதுவும் நடக்காதது போன்று இருந்துள்ளார்.

தொலைக்காட்சி தொடர் ஷூட்டிங்கில் கலந்து கொள்ளும்போது பல பிரச்சனைகள் வரத்தான் செய்கிறது. நான் அது குறித்து தயாரிப்பு தரப்பிடம் புகார் தெரிவித்தேன். அவர்கள் எனக்கு ஆதரவாக உள்ளனர். அவர்களே இந்த பிரச்சனைகளை தீர்க்கட்டும் என்று விட்டுவிட்டேன் என்கிறார் டீனா.

கண்ட இடத்தில் கை வைக்காதே என்று டீனா எச்சரித்தும் அதை கேட்காமல் மோஹித் சேட்டை செய்ததாக கூறப்படுகிறது. ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை என்றும், தானும் டீனாவும் நல்ல நண்பர்கள் என்றும் கூறியுள்ளார் மோஹித்.

சில மாதங்களுக்கு முன்பு டான்ஸ் காட்சியை ஷூட் செய்தபோதும் மோஹித் டீனாவை கண்ட இடத்தில் தொட்டதாக கூறப்படுகிறது. மோஹித் தவறாக நடந்து கொண்டால் அந்த இடத்திலேயே லெஃப்ட் அன்ட் ரைட் வாங்குமாறு டாயன் குழு டீனாவிடம் தெரிவித்ததாக சம்பவம் குறித்து அறிந்த ஒருவர் தெரிவித்துள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]