கண்டி வீதியில் இடம்பெற்ற கோர விபத்தில் இருவர் பலி

கொழும்பு கண்டி பிரதான வீதி கேகாலை கரடுபான பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

பேருந்து மற்றும் சிற்றூந்து ஒன்றும் மோதுண்டு குறித்த விபத்து நேர்ந்துள்ளது.

விபத்தில் மேலும் நால்வர் காயமடைந்துள்ளதாக தெரியவருகின்றது.

பேருந்து சாரதியின் மோசமான செயற்பாடே விபத்திற்கு காரணம் என ஆரம்ப விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

விபத்தை ஏற்படுத்திய பேருந்தின் சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளதோடு விபத்தில் காயமடைந்தவர்கள் கேகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

காரில் பயணித்த 54 வயது பெண்மணியும் 60 வயது ஆணுமே சம்பவத்தில் பலியாகியுள்ளனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]