கண்டி பாடசாலைகள் நாளை திறக்கப்படும்

கண்டி நிர்வாக மாவட்டத்தில் தற்காலிகமாக மூடப்பட்ட சகல அரச பாடசாலைகளும் நாளை (12) மீள திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம் இதனை தெரிவித்துள்ளார்.

கடந்த வாரம் கண்டி மாவட்டத்தில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாக மறு அறிவித்தல் வரை கண்டி நிர்வாக மாவட்டத்திற்குட்பட்ட சகல அரச பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டிருந்தது.

தற்போது கண்டி மாவட்டத்தில் அமைதியான சூழல் காணப்படுவதால் பாடசாலைகளை மீண்டும் 12ஆம் திகதி ஆரம்பிக்க முடிவு செய்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]