கண்டி, நானுஓயா, இரத்தினபுரியில் மூன்று தேசிய பாடசாலைகள் இராதா நடவடிக்கை

கண்டி, நானுஓயா, இரத்தினபுரியில் மூன்று தேசிய பாடசாலைகள் அமைப்பதற்கு கல்வி அமைச்சி நடவடிக்கை எடுத்துள்ளது.

மலையகம் நுவரெலியா மாவட்டத்தில் நீண்டகாலமாக குறைபாடாக இருந்த தேசிய பாடசாலை ஒன்றை அமைப்பதற்கான முதற்கட்ட நடவடிக்கை தற்போது முன்னெடுக்கபட்டுள்ளது.

மலையத்தை பொருத்தவரையில் மாகாண பாடசாலைகளே அதிகமாக இருக்கின்றது. குறிப்பாக தமிழ்மொழி மூலமான தேசிய பாடசாலைகள் மலையக பெருந்தோட்ட மாணவர்களுக்காக கண்டி மாவட்டத்தில் இரண்டும், மாத்தளை மாவட்டத்தில் இரண்டும், பதுளை மாவட்டத்தில் இரண்டுமாக மொத்தமாக ஆறு பாடசாலைகள் மாத்திரமே காணப்படுகின்றன.

இதனை அதிகரிக்கும் முகமாக பிரதமர் ரணில் விக்கிரைமசிங்கவின் ஆலோசனைக்கு அமைய கண்டி மாவட்டத்தில் சகல வசதிகளும் கொண்ட தேசிய பாடசாலை கண்டி மாபேரிதன்ன பிரதேசத்திலும், நுவரெலியா மாவட்டத்தில் சகல வசதிகளும் கொண்ட தேசிய பாடசாலை நானுஓயாவிலும், இரத்தினபுரி மாவட்டத்தில் சகல வசதிகளும் கொண்ட தேசிய பாடசாலை இரத்தினபுரியிலும் அமைப்தற்கான நடவடிக்கை முன்னெடுக்கபட்டு வருகின்றது.

கண்டி, நானுஓயா

கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன் தலைமையில் முன்னெடுக்கபடும் இந்த வேலைதிட்டத்தில் நுவரெலியா மாவட்டத்திற்கான தேசிய பாடசாலை நானுஓயா எடின்பொரோ தோட்டத்தில் அமைப்பதற்கான முதற்கட்ட நடவடிக்கை தற்போது முன்னெடுக்கபட்டு வருகின்றது. களனிவெலி பெருந்தோட்ட கம்பனி இதற்கான 5 ஏக்கர் காணியினை வழங்குவதற்கும் முன் வந்துள்ளது. இந்த இடத்தை பார்வையிடுவதற்காக கல்வி அமைச்சின் பாடசாலை கட்டட அபிவிருத்தி பிரிவின் பொறியியளாலர்கள் திட்ட வரைபுணர்கள். மத்திய மாகாண கட்டட பொறியிலாளர்கள் உட்பட இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன் குறித்த இடத்திற்கு விஜயம் ஒன்றினை மேற்க் கொண்டு காணியை பார்வையிட்டனர்.

தற்போது கண்டி மாபெரிதன்னையில் அமைய இருக்கும் தேசிய பாடசாலைக்கு 5 ஏக்கர் காணியும் நுவரெலியா மாவட்டம் நானுஒயாவில் அமைய இருக்கும் தேசிய பாடசாலைக்கு 5 ஏக்கர் காணியும் இரத்தினபுரியில் அமைய இருக்கும் தேசிய பாடசாலைக்கு 4 ஏக்கர் காணியும் பிரதமரின் ஆலோசனைக்கு அமைய ஒதுக்கபட்டள்ளது.

நுவரெலியா மாவட்டம் நானுஓயாவில் அமையவிருக்கும் பாடசாலைக்கு நுவரெலியா பிரதேசம், நானுஓயா பிரதேசம், தலவாகலை, டயகம, அக்கரபத்தனை, லிந்துல்லை, சென்கூம்ஸ் தோட்டம் உட்பட இதற்கு கிட்டிய பிரதேசங்கள் தோட்டங்களில் இருந்து மாணவர்கள் இங்கு வந்து கல்வி கற்க முடியும்.
நுவரெலியா ஹட்டன் பிரதான பாதையும் பஸ் போக்குவரத்தும் இதற்கு உள்ளது. நூனுஓயா பிரதான புகையிரத நிலையம் அருகில் காணப்படுவதால் வேறு பிரதேசங்களில் இருந்தும் மாணவர்கள் வரமுடியும். பாடசாலை வருவதற்கும் பின் மாணவர்கள் வீடு செல்வதற்கும் புகையிரத வசதிகளும் மேற்கொள்ளபடும். குறித்த இடத்தில் தற்போது இந்து ஆலயம், பௌத்த விகாரை,இ கிருஸ்த்தவ ஆலயம், இந்திய காந்தி தாத்தாவின் நினைவாலயம் உட்பட ஒரு அழகான இற்கையான மாணவர்கள் கல்வி கற்க கூடிய அழகிய சூழலும் காணப்படுகின்றது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]