கண்டி – கலஹா வைத்தியசாலையின் செயற்பாடுகள் முடக்கம்

கண்டி – கலஹா வைத்தியசாலையின் செயற்பாடுகள் முடக்கம்

நேற்றைய தினம் இடம்பெற்ற சம்பவத்தால் கண்டி கலஹா வைத்தியசாலையின் வைத்தியர்கள் மற்றும் தாதியர்கள் வைத்தியசாலைக்கு சமூகமளிக்கவில்லை. ஆதலால் வைத்திய சாலையின் சேவைகள் முற்றிலுமாக முடங்கியுள்ளது.

நேற்றையதினம் தெல்தோட்டை தோட்டப் பகுதியைச் சேர்ந்த குழந்தையொன்றை வைத்தியசாலையில் பெற்றோர் அனுமதித்தனர். அங்கு அனுமதிக்கப்பட்ட குழந்தையை சுமார் இரண்டு மணித்தியாலங்களாக வைத்தியர்கள் யாரும் கவனிக்காததன் காரணத்தால் பெற்றோர் குழந்தையை பேராதனை வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

பேராதனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட குழந்தை உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்தனர். குழந்தையின் இழப்பைத் தாங்க முடியாத பெற்றோர் மற்றும் பிரதேசவாதிகள் கலஹா வைத்தியசாலையின் வைத்தியர்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் அப் பிரதேசவாசிகள் வைத்தியசாலையினுள் இருந்த பொருட்கள் மற்றும் வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வைத்தியர்களின் வாகனங்களையும் அடித்து நொறுக்கியுள்ளனர்.

அப்பிரதேசவாசிகள் வைத்தியர்களின் கவனயீனமே அப்பச்சிளம் குழந்தையின் உயிரைப் பறித்துள்ளதாக தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மற்றும் வைத்தியர்களை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் எனவும் கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

ஆர்ப்பாட்டம் தொடர்ந்த நிலையில், ஏற்பட்டுள்ள பதற்றசூழ்நிலையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டனர்.எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுப்பட்ட மக்களை கலைப்பதற்காக பொலிஸார் கண்ணீர்புகை பிரயோகத்தை மேற்கொண்டனர்.

இதனால் அப்பிரதேசத்தில் பெரும் பதற்றம் நிலை ஏற்பட்டது. இன்றைய தினம் வைத்தியசாலை வெறிச்சோடிக் காணப்பட்டது.

கலஹா வைத்தியசாலையின் கலஹா வைத்தியசாலையின் கலஹா வைத்தியசாலையின்

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]