கண்டி-கலஹா சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் சிக்கினர்

கண்டி-கலஹா சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் இனங்காணப்பட்டுள்ளதாகவும் அவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கண்டி, கலஹா பிரதேச வைத்தியசாலையின் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தமை மற்றும் வைத்தியர்களுக்கு அச்சுறுத்தல் விடுத்த சந்தேகநபர்கள்; தொடர்பாக விசாரணையை மேற்கொண்டு அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்குமாறு சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன, சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் அனில் ஜயசிங்கவிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்நிலையில் குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.

கடந்த 28 ஆம் திகதி கலஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ஒன்றரை வயதான ஆண் குழந்தைக்கு உடனடியாக சிகிச்சை வழங்காதமையினால் குழந்தை உயிரிழந்தாக பெற்றோர்கள் தெரிவித்ததை அடுத்து அப்பகுதியில் அமைதியின்மை ஏற்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து வைத்தியசாலையின் சொத்துக்களுக்கு மக்கள் சேதம் விளைவித்ததாக செய்திகள் வெளியாகின.

ஆனால் குழந்தையை உரிய நேரத்தில் சிகிச்சைக்காக அவது பெற்றோர்கள் அழைத்து வராதமையே குழந்தை உயிரிழந்தமைக்கு காரணமென வைத்தியசாலை நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

அத்தோடு குறித்த அசம்பாவித சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரை உடனடியாக கைது செய்யாவிடின் பணிப்புறக்கணிப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]