கண்டி கலவரம் – பாதிக்கப்பட்ட மக்களிடம் பொலிஸார் வேண்டுகோள்!

கண்டியில் ஏற்பட்ட கலவரத்தில் சேதமடைந்த சொத்துக்கள் தொடர்பாக பொலிஸில் இதுவரை முறைப்பாடு செய்யாதவர்கள் அது தொடர்பில் உடனடியாக அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திற்கு சென்று முறையிடுமாறு பொலிஸார் அழைப்பு விடுத்துள்ளனர்.

அண்மையில் கண்டியில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவங்களால் பாதிக்கப்பட்ட மக்கள், சேதமடைந்த தமது உடைமைகள் தொடர்பில் பொலிஸில் முறையிடுமாறு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த சில தினங்களாக அப்பகுதியில் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டிருந்த போதிலும் இரண்டு நாட்கள் ஊரடங்குச் சட்டம் நீக்கப்பட்டுள்ளது.

கடந்த 7 ஆம் திகதி முதல் அப் பகுதியிலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டிருந்த நிலையில் இன்று மறுபடியும் பாடசாலைகள் ஆரம்பித்துள்ளன.

இந்நிலையில் கண்டியின் சில பகுதிகளில் நிலவிய வன்முறைகள் அனைத்தும் பூரண கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ள போதிலும் அப் பகுதியில் பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]