கண்டியில் பெரும் சோகம் – ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் பரிதாப பலி!!

விபத்தா? தற்கொலையா? பொலிஸார் தீவிர விசாரணை

கண்டி மெனிக்ஹின்ன, மல்பான என்ற இடத்தில் வீட்டினுள் எரிந்த நிலையில் மூன்று சடலங்களைப் பொலிசார் நேற்று (10) மீட்டுள்ளனர்.

மரணத்திற்கான காரணம் இன்னும் கண்டறியப்பட வில்லை. ஆனால் வீட்டினுள் எரிந்த நிலையிலேயே சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. 36 வயதுடைய இந்திக புஷ்பகுமார பிரேமதிலக்க என்ற தந்தையும், 13 வயதுடைய நவாஞ்சனா பிரேமதிலக என்ற மகளும், 5 வயது கயான் பிரேமதிலக என்ற மகனும் பலியானதாகத் தெரிய வருகிறது. மெனிக்கின்ன ரம்பொடவத்தை என்ற இடத்திலுள்ள வீட்டின் அறை ஒன்று தீப்பிடித்து மேற்படி மரணம் சம்பவித்துள்ளதாகத் தெரிய வருகிறது.

மரணித்தவர்கள் பற்றிய மேலதிக விபரங்கள் இன்னும் தெரியவரவில்லை.

மரணித்தவரின் மனைவி வெளிநாடு ஒன்றில் பணிபுரிவதாக மேலும் தெரியவருகிறது.

அதே நேரம் மரணித்தவர் அதிக கடன் சுமையால் பாதிக்கப்பட்டிருந்தவர் எனவும் இதனால் அவர் சில வேளை பிள்ளைகளை கொலை செய்து தானும் தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் எனப் பொலிசார் சந்தேகிக்கின்றனர்.

இறுதியாக அயலவர் ஒருவர் மரணித்தவரை சந்தித்த போது அவர் இரவு (9) இடியப்பம் வாங்கி வந்ததை அவதானித்ததாகவும் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு தீ பரவியிருப்பதன் காரணம் மற்றும் இவர்கள் தீக்கிரையான சம்பவங்கள் குறித்து மெனிக்கின்ன பொலிஸ் பொறுப்பதிகாரி திப்பட்டுதுனுவ தலைமையில் தற்போது விசாரணைகள் இடம்பெற்று வருகின்றது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]