கணேசமூர்த்தி பிணையில் விடுதலை

ஊவா மாகாண சபையின் ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர் ஏ.கணேசமூர்த்தி கைது செய்யப்பட்டு பின்னர் நீதிமன்ற பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

இன்று காலை கைது செய்யப்பட்ட அவர் பதுளை நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டதையடுத்து அவருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

வௌிநாட்டுக்கு அனுப்புவதாக கூறி நிதி மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டிலேயே அவர் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளார்.

எவ்வாறாயினும் 100,000 ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப்பிணையில் அவர் விடுவிக்கப்பட்டுள்ளதுடன், வழக்கை எதிர்வரும் மே மாதம் 08ஆம் திகதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிடப்பட்டுள்ளது.