கணவர் மீதுள்ள கோபத்தில் ஐந்து மாதக் குழந்தையை தண்ணீரில் மூழ்கடித்த கொடூர தாய்- பலவீனமானவர்கள் வீடியோ பார்க்கத்தடை

ஐந்து மாதக் குழந்தையை தண்ணீரில் மூழ்கடித்து அதை வீடியோ எடுத்து கணவருக்கு அனுப்பிய தாய் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஜார்ஜியாவைச் சேர்ந்த Laquanda Lenea Mosley (வயது 27) என்பவருக்கும் அவளது கணவரான Kevin Banks என்பவருக்கும் குழந்தைகளை யார் வைத்துக் கொள்வது என்ற விடயத்தில் பிரச்சினை இருந்தது.

இந்நிலையில் ஒரு நாள் அவள் சமூக ஊடகம் வழியாக தனது கணவரிடம் பணம் கேட்டுக் கொண்டே இருந்துள்ளார். ஆனால் கணவர் எவ்வித பதிலையும் கொடுக்கவில்லை.

இதனால் ஆத்திரமுற்ற Mosley, இது தானே உனக்கு வேண்டும் என்று கத்திக்கொண்டே தனது ஐந்து மாதக் குழந்தையை தலைகீழாகத் தூக்கி ஒரு பாத்திரத்தில் இருந்த தண்ணீருக்குள் குழந்தையின் தலையை மீண்டும் மீண்டும் மூழ்கடித்துள்ளார்.

அதுமட்டுமல்லாது அதனை வீடியோவாக எடுத்து அவள் தனது கணவனுக்கு அனுப்பியுள்ளார்.

வீடியோவைப் பார்த்து அதிர்ந்து போன Kevin அதை சமூக ஊடகங்களில் வெளியிட்ட பின் பொலிசாருக்கு தகவல் கொடுத்தார்.

தகவலின் பேரில் பொலிசார் குறித்த பெண்ணைக் கைது செய்தனர். பின் அவரது மூன்று குழந்தைகளையும் மீட்டு அரசு காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர்.

மருத்துவர்கள் அந்த குழந்தையை பரிசோதித்தனர். இருப்பினும் குழந்தைக்கு என்ன ஆயிற்று என்பதை அவர்கள் தெரிவிக்கவில்லை.

குழந்தையை கொல்ல முயன்ற கொடூரத் தாய் தற்போது சிறைத்தண்டனையை அனுபவித்து வருகிறார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]