கணவர் இறந்து மூன்று ஆண்டுகளுக்கு பின் மனைவிக்கு பிறந்த ஆண் குழந்தை

கணவர் இறந்து மூன்று ஆண்டுகளுக்கு பின், செயற்கை கருத்தரிப்பு மூலம் அழகான ஆண் குழந்தையை பெற்றேடுத்து உள்ளார் ஒரு பெண்.

பெங்களூரை சேர்ந்த கவுரவ்(வயது30) என்பவரும், ஜெய்ப்பூரை சேர்ந்த பெண் சுப்ரியா ஜெயின்(வயது30) என்பவரும் ஒரே இடத்தில் மார்க்கெட்டிங் ஆலோசகராக பணிபுரிந்தா போதை காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

இவர்களுக்கு குழந்தை இல்லை என்றாலும், இவர்கள் 5 வருடம் மகிழ்ச்சிகரமாக குடும்பம் நடத்தினர். இந்தநிலையில் வட கர்நாடகாவில், ஹுப்ளி அருகே நடந்த வாகன விபத்தில் கவுரவ் பரிதாபமாக இறந்தார்.

இதனால் நிலைகுலைந்து போன மனைவி சுப்ரியா ஜெயின், தன கணவர் மூலம் குழந்தை பெறும் எண்ணத்தை கைவிடமால். கவுரவ் உயிருடன் இருந்த போது அவரது விந்து சேகரிக்கப்பட்டு உறை நிலையில் வைக்கப்பட்டிருந்ததை கொண்டு செயற்கை கருத்தரிப்பு மூலம் குழந்தை பெற முடிவெடுத்தார்.

இதனையடுத்து, மும்பையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் செயற்கை கருத்தரிப்பு முயற்சியில் ஈடுபட்டார். ஆனால் அந்த முயற்சி தோல்வியில் முடிந்தது.

இதனையடுத்து மருத்துவர்கள், ஒரு வாடகை தாயின் கர்ப்ப பை மூலம், சுப்ரியாவின் கருமுட்டையும், கவுரவின் விந்தனுவும் செயற்கை முறையில் கருவூட்டல் செய்யப்பட்டு வாடகை வைத்து வளர்க்கப்பட்டது.

10 மாதங்களுக்கு பின் வாடகை தாய் மூலம் சுப்ரியா அழகான ஆண்குழந்தையை பெற்றெடுத்துள்ளார். இந்த அதிசய குழந்தை பிறப்பு சம்பவம், கணவர் கவுரவ் இறந்த மூன்று ஆண்டுகளுக்கு பின் நடந்துள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]