கணவன் மனைவி வாழ்க்கை இன்பமாக இருக்க இதை மட்டும் ட்ரை பண்ணுங்க

இலக்கணம் இல்லாவிட்டால் மொழி மட்டுமல்ல உறவும் தடைப்பட்டு போகும். நமது உறவில் ஏற்படும் எந்த ஒரு விஷயத்திற்கும் நம்மளை தவிர வேறு யாரும் காரணமாக இருக்க முடியாது.

சூழ்நிலைகளை கையாளுதல் மட்டுமின்றி, சந்தேகம், புரிதல், அக்கறை, விட்டுக்கொடுத்தல் என பல காரணங்களால் உறவுகளில் இன்பம் குறைய ஆரம்பிக்கிறது.

எக்காரணம் கொண்டும் நமது உறவில் யாரும் தலையிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது அவசியம்.

அதற்கு கணவன், மனைவி மத்தியில் ஓர் சமரசம், உடன்படிக்கை ஏற்படுத்த வேண்டியது அவசியமாகும்.

இனி, இன்பமான உறவுக்கு தம்பதிகள் தங்களுக்குள் ஏற்படுத்திக் கொள்ள வேண்டிய உடன்படிக்கைகள் பற்றிக் காண்போம்….

ஒருவர் மற்றொருவரின் பேச்சைக் கேட்பது
பெரும்பாலும் தம்பதிகளுக்குள் ஏற்படும் பிரச்சனைகளுக்கு காரணமாய் இருப்பது, ஒருவரின் பேச்சை, மற்றொருவர் கேட்காமல் இருப்பது தான். இதில், சிலருக்கு ஈகோ வேறு ஏற்படும்.

“நீ என்ன சொல்றது, நான் என்ன கேக்குறது…”. இந்த அடிப்படை விஷயத்தில் ஒத்துப் போனாலே போதும். உங்கள் உறவில் அதிகமாக சண்டை, சச்சரவுகள் ஏற்படாது.

நீங்கள் நீங்களாகவே இருப்பது ஒரு சில தம்பதிகள், அவர்களது துணைக்காக, தங்களது சொந்த விருப்பு, வெறுப்புகளை மாற்றிக்கொள்வார்கள்.

இது, ஆரம்பத்தில் சந்தசமாக இருந்தாலும். என்றாவது சண்டை வரும் போது, “உனக்காக நான் இதெல்லா பண்ணேன், நீ மொத்தமா மறந்துட்ட.. யூ ஆர் ச்சீட்.. ஷிட்” என்று தாட்டு பூட்டென்று கத்தும் போது, எரிகிற நெருப்பில் பெற்றோலை ஊற்றியதை போல ஆகிவிடும்.

உண்மையாக இருத்தல் எக்காரணம் கொண்டும், எந்த சூழ்நிலையிலும், உண்மையாக இருக்க வேண்டும்.

நாம் கூறும் பொய் அந்த சமயத்திற்கு மட்டுமே தீர்வை இருக்குமே தவிர. காலம் கடந்து அது வெளிப்படும் போது. அதை விட பன்மடங்கு பெரிய விளைவை ஏற்படுத்தும்.

உயர்வுக்காக ஒத்திருத்தல் தனித் தனியாக, தங்களது உயர்வை பற்றி பரிசீலித்து செயல்படாமல்.

ஒற்றுமையாக, இருவரின் உயர்வின் மேலும் அக்கறை எடுத்துக்கொள்ளுதல் அவசியம். இது, உங்கள் இல்லற வாழ்க்கையில் மேன்மையை ஏற்படுத்தும்.

பிரச்சனைகளுக்கான தீர்வு பிரச்சனைகளற்ற வாழ்வென்பது, ருசியற்ற உணவு. ஆனால், அதை எப்படி கையாளப் போகிறோம் என்பது முக்கியம்.

அமைதி அவசியம், என்ன, ஏது என்று எதையும் ஆராயாமல் எடுத்த எடுப்பில் கோபப்படுவதை நிறுத்த வேண்டும்.

அமைதியாக இருவரும் சேர்ந்து பேசும் போது, பிரச்சனைகள் எவ்வளவு கடினமான இரும்பாக இருந்தாலும் கூட துரும்பாகிவிடும்.

நேரம் ஒதுக்குதல் எவ்வளவு முக்கியமான வேலையாக இருந்தாலும், தினமும் இருவரும் சேர்ந்து பேச சிறிது நேரம் ஒதுக்குதல் அவசியமாகும். இது சரியாக நடந்தாலே, பெரும்பாலும் பிரச்சனைகள் ஏற்படாது வாழ்க்கை இன்பமாக அமையும்

ஒருவருக்கு ஒருவர் உதவுதல் வேலையை பிரித்து செய்வதை விட, இனைந்து செய்வது நல்ல பலன் தரும்.

பெண்களின் முக்கியமான நாட்களில் அவர்களுக்கு உதவுதல் அவசியம். ஏன் முற்றிலும் அவர்களுக்கு ஓய்வளித்து, ஆண்களே கூட அன்றைய அனைத்து வேலைகளையும் செய்யலாம்.

ஆனால், யாரும் அவ்வாறு செய்வதேக் கிடையாது. அந்த மூன்று நாட்கள் எவன் ஒருவன் தனது மனைவியை நன்கு பார்த்துக் கொள்கிறானோ, அவனது மற்ற முந்நூறு நாளும் இன்பமாக அமைகிறது.

ஒப்பிட்டு பேசுவது எல்லாரும் எல்லா விஷயங்களிலும் ஒரே மாதிரி இருப்பது கிடையாது.

எனவே, தம்பதிகளுக்குள் ஒருவரை மற்றொருவருடன் ஒப்பிட்டு பேசுவதைக் குறைத்துக்கொள்ள வேண்டும்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]