கணவனை கொலை செய்த மனைவி கைது

அரநாயக்க, தெபத்தகம பிரதேசத்தில் மனைவியின் தாக்குதலுக்கு உள்ளான கணவன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குடும்ப தகராறு காரணமாக இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மனைவி மீது கணவன் அசிட் வீச்சினை மேற்கொள்ள முற்பட்ட போது, கணவனின் மீது அசிட் விழுந்துள்ளதாக பொலிஸார் கூறினர்.

இதனையடுத்து, கூரிய ஆயுதத்தால் கணவன் மீது மனைவி தாக்குதல் நடத்தியுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து பொலிஸாருக்கு கிடைத்த தகவலை அடுத்து, சம்பவ இடத்துக்கு வந்த பொலிஸார் படுகாயமடைந்திருந்த கணவனை மீட்டுள்ளனர்.

அதனையடுத்து, திப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், கணவன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் கூறினர்.

சம்பவம் தொடர்பில் மனைவியை கைதுசெய்ய பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளதுடன் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]