கணவனுக்காக வைத்திய சாலை முன் பிச்சை எடுத்த மனைவி

ஒடிசா மாநிலத்தை சேர்ந்த பெண் ஒருவர் தனது கணவனின் உடலை சொந்த ஊருக்கு எடுத்து செல்ல பணம் இல்லாத காரணத்தால் வைத்திய சாலை முன்பு யாசகம் பெற்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பழங்குடியின தம்பதியினர் டாக்ராய் மற்றும் அவரது மனைவியான முண்டா.

இவர்கள் கடந்த சில மாதங்களுக்கு முன் கூலி தொழிலுக்காக  தங்களது சொந்த கிராமத்தில் குழந்தைகளை விட்டு விட்டு பட்டமண்டாய் நகரத்திற்கு குடிபெயர்ந்துள்ளனர்.

இதன் போது டாக்ராய்க்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்படவே அவர் பட்டமண்டாயில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போதும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

கணவரின் உடலை சொந்த கிராமத்திற்கு கொண்டு சென்று அடக்கம் செய்ய நினைத்த முண்டா அதற்கு முயற்சி செய்தார்.

அதற்காக மருத்துவமனை நிர்வாகத்திடம் இலவச அமரர் ஊர்தி சேவை பெற அணுகினார். ஆனால் மருத்துவமனை நிர்வாகம் ரூபாய் 300 கொடுத்தால் தான் அமரர் ஊர்தி சேவை வழங்க முடியும் என கூறிவிட்டது.

இதனையடுத்து 300 ரூபாய் பணத்திற்காக மருத்துவமனை முன்பு முண்டா யாசகம் பெற்று தனது கணவரின் உடலை அடக்கம் செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]