கணவனுக்காக விரதமிருக்க மறுத்த மனைவி – கணவனின் பரிதாப மரணம்

உத்தபிரதேச மாநிலத்தில் தனது கணவருக்காக விரதம் அனுஷ்டிக்க மனைவி மறுத்ததால் கணவன் தற்கொலை செய்து செய்து கொண்ட சம்பவம் பதிவாகியுள்ளது.

கடந்த நான்கு மாதங்களுக்கு முன் திருமணம் செய்து கொண்ட தீப் சந்த்(21) என்ற இளைஞ்ஞனே இவ்வாறு தற்கொலை செய்துக் கொண்டுள்ளார்.

வட இந்திய மாநிலங்களை சேர்ந்தவர்கள் கர்வா சௌத் என்ற தெய்வ வழிப்பாடை மேற்கொள்பவர்கள். இவர்கள் தனது கணவர்ன் உடல் ஆரோக்கியத்திற்காக விரதம் இருப்பார்கள்.

இப்பிரார்த்தனையை தீப் சந்தின் மனைவி மேற்கொள்ளவில்லை. இதனைத் தொடர்ந்து தீப் சந்த் ஏன் விரதம் இருக்கவில்லை என மனைவியிடம் கேட்டுள்ளார். தனக்கு உடல்நலம் சரியில்லை என்பதால் விரதம்  இருக்கவில்லை என மனைவி கூறினாரியுள்ளார்.

இதனால் மணமுடைந்த தீப் சந்த் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இச்சம்பவம் குறித்து பொலிசார்  மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]