கணவனின் தலைவிதியை மாற்றும் மனைவியின் பாதம்- உங்க மனைவியின் பாதம் எப்படி பாஸ்??

மனைவியின் பாதத்தை வைத்தே கணவனின் தலைவிதியை கணித்து விடலாம் என்று நிறைய சாஸ்திரங்கள் கூறுகின்றன.அவற்றுள் முக்கியமான ஒன்று சாமுத்ரிகா சாஸ்திரம்.

இந்த சாஸ்திரம் தான் ஆண் பெண் உறவுக்கு இடையேயான பிரச்சனைகளுக்கு தீர்வுகள்.மனிதர்களின் வாழ்வின் முன்னேற்றங்களை அவர்கள் உடம்பில் உள்ள மச்சத்தை வைத்து கணிக்கலாம்.அதில் ஒன்று தான் பெண்களின் பாதங்கள்.

மனைவியின் பாதம் எப்படி இருக்கிறதோ அதை பொறுத்தே கணவனின் வாழ்க்கை தீர்மானிக்கப்படுகிறது என்கிறது சாமுத்ரிகா.பெண்கள் கால்களின் விரல்கள் 5 நபர்களாக குறிப்பிடப்படுகிறது.

கட்டை விரல்-அங்குஷ்ட்டா

இரண்டாம் விரல் -பர்ஜானி

நடு விரல்-மத்தியமா

நான்காம் விரல்-அனாமிகா

சுண்டு விரல்-கனிஷ்ட்டிகா

ஒரு பெண் தனது பாதத்தில் சக்ரா ,வாஜா,ஸ்வஸ்திகா போன்ற குறிகளை தனது பாதத்தில் உள்ளடக்கி வைத்துள்ளார்.இதை வைத்து அவரது கணவரின் தலைவிதியை அறிய முடியும்.

பெண்ணின் இரண்டாம் விரல் கட்டை விரலை விட பெரியதாக இருந்தால் அந்த பெண் யாருக்கும் அடங்கமாட்டாள். முக்கியமாக கணவனுக்கு அடங்கவே மாட்டாள்.கணவன் சொல்வது எதையும் கேக்காமல் தனக்கு தானே முடிவு எடுத்துக்கொள்வாள்.அதனால் திருமண வாழ்க்கையில் பிரச்சனை ஏற்பட்டு கணவனின் நிம்மதி பாதிக்கப்படும்.

கால்களின் விரல்கள் மலை போன்று பெரியதாக இருந்தால் அணைத்து பிரச்சனைகளையும் தாங்கி கணவனின் வெற்றிக்கு உறுதுணையாக இருப்பாள்.மேலும் நல்ல குணம் படைத்தவளாக இருப்பாள்.

பெண்கள் நடக்கும் போது அவளது நான்காம் விரலும்,சுண்டு விரலும் பூமியில் படாமல் நடந்தால் அவள் கணவன் மீது நம்பிக்கை அற்றவளாக இருப்பாள்.இதனால் வாழ்வில் சண்டை சச்சரவு ஏற்படும்.

நான்காம் விரலும் சுண்டு விரலும் ஒரே அளவில் இருந்தால் கணவனுக்கு தொழில் நஷ்டம் ஏற்படும்.

அணைத்து விரல்களுக்கும் இடையே இடைவெளி அதிகமாக இருந்தால் இவர்கள் பண விஷயத்தில் ஊதாரியாக இருப்பார்கள்.செலவு அதிகம் செய்வார்கள்.

பெண்களின் பாதம் வட்ட வடிவில் இருந்தால் கணவனுக்கு அதிஷ்டம் தான்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]