கணவனின் அந்தரங்கத்தை வெட்டி பையில் வைத்துக்கொண்ட பெண்?

கணவனுடன் சண்டை போட்டு, அவரது அந்தரங்க உறுப்பை அறுத்துச் சென்ற மனைவி கைது செய்யப்பட்டுள்ளார்.

அத்துடன், அவர் தன் பணப்பையில் வைத்திருந்த உறுப்பும் கைப்பற்றப்பட்டது. குடியாத்தத்தில் உள்ள லிங்கன்றம் என்ற இடத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

ஜெகதீசன் (39)கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பாக தன்னுடன் தொழிற்சாலையில் வேலை பார்த்த சரசு (29) என்ற பெண்ணைத் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஒரு மகனும் மூன்று மகள்களும் இருக்கின்றனர்.

எட்டு மாதங்களுக்கு முன்பாக, கணவருக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதாகக் கருதிய சரசு அவரிடமிருந்து பிரிந்து சென்று வி.கோட்டாவில் உள்ள தாய் வீட்டில் வசித்து வந்தார். குழந்தைகள் ஜெகதீசனின் தாய் வீட்டில் வசித்துவந்தனர்.

இந்த நிலையில், கடந்த 17ஆம் திகதி தன் மகனின் பிறந்த நாளுக்காக மீண்டும் கணவனின் வீட்டிற்கு வந்தார் சரசு. அப்போது மகன் கேட்டுக்கொண்டதால், மீண்டும் கணவனுடன் வசிக்க ஆரம்பித்தார்.

இருந்தபோதும், ஜெகதீசன் தொடர்ந்து அந்தப் பெண்ணுடன் சண்டையிட்டு வந்துள்ளார். புதன்கிழமையன்று இரவில் மீண்டும் குடித்துவிட்டு வந்த ஜெகதீசன் அந்தப் பெண்ணிடம் சண்டையிட்டுள்ளார்.

ஒரு மணி வரை சண்டை நடந்திருக்கிறது. அதற்குப் பிறகு மீண்டும் நன்றாகக் குடித்துவிட்டு அவர் தூங்கியிருக்கிறார். இந்தச் சண்டைகளினால் மன உளைச்சலில் இருந்த சரசு மூன்று மணியளவில் கணவனின் அந்தரங்க உறுப்பை கத்தியால் அறுத்துள்ளார்.

ஜெகதீசன் குடிபோதையில் இருந்ததால் அவருக்கு வலி தெரியில்லை என்று கூறப்படுகிறது. அதற்குப் பிறகு சரசுவே அவரை எழுப்பி, ‘இனி எப்படி வேறொரு பெண்ணுடன் தொடர்பு வைத்திருப்பாய் என்பதைப் பார்க்கிறேன்’ என்று சொல்லிவிட்டு, அருகில் உள்ள ஜெகதீசனின் தாயாரிடமும் போய் விடயத்தைச் சொல்லியுள்ளார்.

அப்போதும் நடந்தது தெரியாத ஜெகதீசன், இரத்தம் கொட்டக் கொட்ட அருகில் வசிக்கும் தன் தாயின் வீட்டிற்குச் சென்றுள்ளார். அதன் பிறகு, அவரது 13 வயது மகனுடன் இரு சக்கர வாகனத்திலேயே சென்று மருத்துவமனையில் சேர்ந்துள்ளார்.

இனிமேல் அவர் உயிரோடு இருக்கலாம், அதற்கு மேல் எதிர்பார்க்க முடியாது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

பின்னர் தனது உறவினர்களின் வீட்டுக்குச் சென்ற சரசு நடந்ததைக் கூறியுள்ளார். அதனையடுத்து, காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது.

அதனையடுத்து, சரசு கைது செய்யப்பட்டுள்ளதுடன் நீண்ட நேரத்திற்குப் பிறகு கணவரின் அந்தரங்க உறுப்பை தன் பணப்பையில் வைத்திருப்பதாக சரசு தெரிவித்துள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]