கட்டுநாயக்க விமான நிலையம் இன்றுமுதல் வழமைக்குத் திரும்புகிறது

கட்டுநாயக்க விமான நிலையத்தின் புனரமைப்புப் பணிகள் பூர்த்தியாகியுள்ள நிலையில் இன்று போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா தலைமையில் அனைத்துல முழு நேர விமான நிலையமாக திறந்துவைக்கப்படவுள்ளது.

விமான நிலையத்தின் ஓடுபாதைகளே புனரமைப்புச் செய்யப்பட்டன. கடந்த மூன்று மாதங்களாக விமானச் சேவைகள் மட்டுப்படுத்தப்பட்டிருந்தது.

கட்டுநாயக்க விமான நிலைய ஓடுபாதையை 50 மில்லியன் டொலர் செலவில் விரிவாக்கும் பணிகள் கடந்த ஜனவரி மாதம் ஆரம்பிக்கப்பட்டன. இதற்காக காலை 8.30 மணி தொடக்கம் மாலை 4.30 மணி வரை விமான சேவைகள் இடைநிறுத்தப்பட்டன.

தற்போது, விமான நிலைய விரிவாக்கப் பணிகள் முடிவடைந்துள்ளதையடுத்து, இன்று தொடக்கம் விமான சேவைகள் வழமைக்குத் திரும்பவுள்ளன. விரிவுபடுத்தப்பட்ட ஓடுபாதையில், திருவனந்தபுரத்தில் இருந்து வரும் யுஎஸ்1162 விமானம் இன்று பிற்பகல் 12.30 மணியளவில் முதலாவதாக தரையிறங்கும்.

கட்டுநாயக்க விமான

உலகின் மிகப்பெரிய பயணிகள் விமானமான ஏ380 விமானங்கள் தரையிறங்க வசதியாக, ஓடுபாதை 60 மீற்றரில் இருந்து 75 மீற்றராக விரிவாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]