கட்டுநாயக்க விமான நிலையத்தை அண்மித்த வீதிகளில் விசேட போக்குவரத்து ஒழுங்கு..


கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் புனர்நிர்மாண செயற்பாடுகள் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளன. எதிர்வரும் ஏப்ரல் மாதம் 6ம் திகதி வரை விமான நிலையத்தின் விமான ஓடுதளம் திருத்தியமைக்கப்படவுள்ளது. இந்நிலையில் குறித்த காலப்பகுதியில் விமான பயணங்கள் தொடர்பான நேர அட்டவணையில் மாற்றங்கள் கொண்டுவரப்படவுள்ளதாக கட்டுநாயக்க சர்வதேச விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை குறித்த காலப்பகுதியில் கட்டுநாயக்க விமான நிலையத்தை அண்மித்த வீதிகளில் விசேட போக்குவரத்து ஒழுங்குகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. நாளாந்தம் பிற்பகல் 3 மணியிலிருந்து மறுநாள் காலை 9 மணிவரை விசேட போக்குவரத்து ஒழுங்குகள் நடைமுறைப்படுத்தப்பட்டிருக்குமென போக்குவரத்து பொலிசார் தெரிவித்துள்ளனர்.