கட்டுநாயக்க விமானநிலையத்தில் இயங்கும் அனைத்து வங்கிகளுக்கும் கட்டார் ரியாலை மறு அறிவித்தல் வரும் வரை மாற்றவேண்டாமென அறிவுறுத்தப்பட்டுள்ளது

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கட்டாரில் இருந்து வரும் பயணிகள் நாணயங்களை மாற்றீடு செய்வதில் பிரச்சினைகளை எதிர்நோக்கியுள்ளதாக தெரியவந்துள்ளது.கட்டுநாயக்க விமானநிலையத்தில்

ஐக்கிய அரபு இராச்சியம், சவூதி அரேபியா, எகிப்து, பஹ்ரைன் உள்ளிட்ட மத்திய கிழக்கின் சில நாடுகள் கட்டாருடனான இராஜதந்திர உறவுகளை துண்டிப்பதாக அறிவித்துள்ளன என, நேற்றையதினம் செய்திகள் வௌியாகின.

தீவிரவாதத்திற்கு கட்டார் ஆதரவளிப்பதாக குற்றம்சாட்டியே அவர்கள் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர் என வௌிநாட்டு ஊடகச் செய்திகள் குறிப்பிட்டுள்ளன.

இதேவேளை, கட்டுநாயக்க விமானநிலையத்தில் இயங்கும் அனைத்து வங்கிகளுக்கும் கட்டார் ரியாலை மறு அறிவித்தல் வரும் வரை மாற்றவேண்டாமென அறிவுறுத்தப்பட்டுள்ளதாக விமான நிலையத்தில் கடமையில் இருந்த அதிகாரியொருவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]