கட்டுத் துப்பாக்கி தவறுதலாக வெடித்து ஒருவர் பலி

வேட்டைக்குச் சென்று கொண்டிருந்தவர் வழுக்கி விழுந்ததில் தன்வசமிருந்த கட்டுத் துப்பாக்கி தவறுதலாக வெடித்து ஒருவர் பலியாகியுளளதாக கரடினாறு பொலிஸார் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு பதுளை வீதியை அண்டிய கரடியனாறு பொலிஸ் பிரிவின் கித்துள் காட்டுப் பகுதியில் புதன்கிழமை இரவு 23.05.2018 இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் கித்துள் கிராமத்தைச் சேர்ந்த கறுப்பையா இராமகிருஷ்ணன் (வயது 40) எனும் குடும்பஸ்தரே பலியாகியுளளார்.

புதன்கிழமை இரவு இந்தப் பிரதேசங்களில் பலத்த மழை பெய்திருந்த வேளையில் சிலர் வேட்டைக்குச் சென்றுள்ளனர். அவ்வேளையில் சேற்றுப் பாதையூடாகச் செல்லும் போது வழுக்கி வீழ்ந்ததில் தன் வசமிருந்த கட்டுத் துப்பாக்கி வெடித்து படுகாயமடைந்துள்ளார்.

இரத்தவாறாகக் கிடந்தவரை கூடச் சென்றவர்கள் மீட்டு கரடியனாறு பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அவர் உயிர் பிரிந்து விட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சடலம் தற்போது உடற்கூறு பரிசோதனைக்காக கரடியனாறு பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

விரிவான விசாரணைகளுக்காக பொலிஸார் ஸ்தலத்திற்குச் சென்றுள்ளனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]