கட்டிப்பிடி வைத்தியத்தால் இவ்வளவு நன்மைகளா?? நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க பாஸ்

கட்டிப்பிடித்தல் மூலம் சிலர் அன்பை வெளிகொணர்வார்கள், ஆனால் கட்டிப்பிடித்தலில் அதை விட பெரிய மகத்துவம் இருக்கிறதாம்.

கட்டிப்பிடித்தல் என்பது அன்பை பரிபாறிக் கொள்தலின் ஒரு உண்ர்வாக உள்ளது. ஆனால் இதன் மூலம் பல பிரச்சனைகள் நீங்குகிறதாம்.

இதை அமெரிக்காவின் பென்சில்வேனியாவில் உள்ள ஒரு தனியார் பல்கலைக்கழக பேராசிரியர் மிக்கல் மெர்ஹ்பி மேற்கொண்ட ஆய்வில் கண்டறிந்துள்ளார். இந்த ஆய்விற்காக 404 ஆண்களை தேர்வு செய்து அவர்களிடம் ஆய்வை நடத்தியுள்ளனர்.

இந்த ஆய்வின் மூடிவில் யாரெல்லாம் மற்றவரை தொட்டு கட்டிப்பிடிக்கிறார்களோ, அவர்களின் உடல்நிலையில் மற்றவர்களை ஒப்பிடும் போது பல மாற்றங்கள் காணப்படுகிறதாம். இரவில் கட்டிப்பிடித்தலினால் நேர்மறையான கருத்துக்களை அவர்களின் மனதில் எழச் செய்கிறது. கட்டிப்பிடிக்கும் இருவருக்கும் இடையேயான உறவு சுமூகமாகிறதாம்.

இந்த தொடுதல் உணர்வின் மூலம் அவர்களின் உடல்நிலையில் மட்டுமின்றி மனதளவிலும் பலசாலிகளாக இருக்கின்றனர்.

கட்டிப்பிடித்தலில் ஒரு விதமான மனநிம்மதியுடன் இவர்கள் நம்முடன் இருக்கின்றனர் என்ற நம்பிக்கையுடன் அவ்விருவரின் உறவுகள் மேம்படுகிறது.

ஆணும் சரி பெண்ணும் சரி கட்டிப்பிடித்தலினால் ஒரு படி மேலே இருக்கிறார்கள் என ஆய்வில் தெரியவந்தது.

கட்டிப்பிடித்தலின் மகத்துவத்தின் நன்மையை மனிதர்களிடம் மட்டுமின்றி நமக்கு பிடித்த எல்லா உயிர்கள் மூலமும் உணரலாம்

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]