கட்டார் நாட்டில் பேட்ட படம் பார்க்க வந்தவர்களுக்கு கிடைத்த பரிசு இதுதானாம்!

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினியிடன் சிம்ரன், திரிஷா, விஜய் சேதுபதி, பாலிவுட் நடிகர் நவாசுதீன் என பலர் நடித்த படம் பேட்ட. சில தினங்களுக்கு முன் திரைக்கு வந்த இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

வெளிநாடுகளிலும் படத்திற்கு நல்ல வசூல் உள்ளது. இந்த நிலையில், கட்டார் நாட்டில் உள்ள பெரிய திரையரங்கமான ஏசியன் டவுனில் சிறப்பு ரசிகர் மன்ற காட்சி இடம்பெற்றது. இதற்கு குடும்பமாக அனைவரும் வருகை தந்தார்களாம்.

படம் பார்க்க வந்தவர்களுக்கு இனிப்பு வழங்கியதோடு ரஜினியுடைய புகைப்படமும் புது காலண்டரும் பரிசாக கொடுக்கப்பட்டதாம்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]