கட்டார் சென்ற ஜனாதிபதி மன்னர் சேய்க் அப்துல்லா பின் அஹமட் பின் காலீபா அல் தானியை சந்தித்தார்

கட்டார்

 

 

 

 

 

 

 

கட்டார் சென்றுள்ள ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன நேற்று அந்த நாட்டின் மன்னர் சேய்க் அப்துல்லா பின் அஹமட் பின் காலீபா அல் தானியை சந்தித்துள்ளார்.

இந்த சந்திப்பு கட்டார் எமீர திவான் மாளிகையில் இடம்பெற்றது.

இரண்டு நாடுகளுக்கும் இடையேயான உறவுகளை மேலும் வலுப்படுத்தி கொள்வது தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.

இலங்கையின் துறைமுகங்கள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளின் விருத்திக்கு உதவி வழங்கவும் கட்டார் அபிவிருத்தி நிதியத்தினூடாக இலங்கையின் அபிவிருத்தி செயற்பாடுகளுக்கு உதவி வழங்கவும் கட்டார் மன்னர் இணக்கம் வெளியிட்டுள்ளார்.

இந்த சந்திப்பை அடுத்து இரண்டு நாடுகளுக்கிடையிலான இராஜதந்திர உறவுகள், மின்சக்தி, நீர் முகாமைத்துவம், சுகாதாரம் மற்றும் நிதி துறைகளில் காணப்படும் தொடர்புகளை மேம்படுத்தத்தக்க 7 புதிய உடன்படிக்கைகள் இதன்போது கைச்சாத்திடப்பட்டன.

இரண்டு நாடுகளின் தூதுவர்கள், அரச அதிகாரிகள் மற்றும் விசேட கடவுச்சீட்டு உடையவர்கள் வீசா பெற்றுக்கொள்ளாது நாடுகளிற்கு உட்பிரவேசிப்பதற்கான புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்று முதலாவதாக கைச்சாத்திடப்பட்டது.

கட்டார் வெளிவிவகார அமைச்சர் மற்றும் இலங்கையின் வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் வசந்த சேனாநாயக்க ஆகியோர் இதில் கைச்சாத்திட்டனர்.

மின்னுற்பத்தி துறைக்கான புரிந்துணர்வு உடன்படிக்கையில் கட்டாரின் மின்சக்தி மற்றும் கைத்தொழிற்துறை அமைச்சர்மற்றும் பிரதி அமைச்சர் அஜித் பீ.பெரேரா ஆகியோர் கைச்சாத்திட்டனர்.

கழிவு நீர் முகாமைத்துவம் தொடர்பான புரிந்துணர்வு உடன்படிக்கையில் இலங்கை சார்பில் அமைச்சர் ரவூப் ஹக்கீம் மற்றும் கட்டாரின் பெருநகரங்கள் மற்றும் சுற்றாடல் அமைச்சர்  ஆகியோர் கைச்சாத்திட்டனர்.

சுகாதாரம் மற்றும் மருத்துவ சேவை பற்றிய புரிந்துணர்வு உடன்படிக்கையில் அமைச்சர் ராஜித்த சேனாரத்ன மற்றும் அந்தநாட்டின் பொதுமக்கள் சுகாதார அமைச்சர் ஆகியோர் கைச்சாத்திட்டனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]