கட்டார் கப்பல் போக்குவரத்து ஒமான் வழியாக

தங்கள் நாட்டின் மீது மற்ற வளைகுடா நாடுகள் விதித்த கட்டுப்பாடுகளை தவிர்க்க, ஒமான் நாட்டு வழியாக  தாங்கள் சரக்கு கப்பல் போக்குவரத்தை தொடங்கியுள்ளதாக கட்டார் தெரிவித்துள்ளது.

வாரம் மும்முறை ஸோஹார் மற்றும் சலாலாவுக்கு நேரடி சேவைகள் இயக்கப்படும் என்று கத்தாட்டார் துறைமுகங்கள் மேலாண்மை நிறுவனம் தெரிவித்துள்ளது.

பொதுவாக கட்டார் நாட்டுக்கு கொண்டு செல்லப்படும் பொருட்கள், ஐக்கிய அரபு எமிரேட்டில் உள்ள துறைமுகங்களில் வைக்கப்பட்டு, பின்னர் அவை சிறிய கப்பல்களில் ஏற்றப்படும்.

ஆனால், கடந்த வாரத்தில் ஐக்கிய அரபு எமிரேட்டுகள், சௌதி அரேபியா, பஹ்ரைன் மற்றும் எகிப்து ஆகிய நாடுகள் பயங்கரவாத குழுக்களுக்கும், ஈரானுக்கும் ஆதரவளிப்பதாக குற்றம்சாட்டி கட்டார் மீது பொருளாதார தடைகள் விதித்து, கத்தாருடனான ராஜ்ய உறவுகளையும் துண்டித்து கொண்டன.

தங்கள் மீது கூறப்பட்ட குற்றச்சாட்டுக்களை மறுத்துள்ள கட்டார் த,ங்கள் மீது விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் சர்வதேச சட்டத்தை மீறுவதாக உள்ளது என்று தெரிவித்தது.

துபாயின் மிகப்பெரிய துறைமுகமான ஜெபேல் அலி துறைமுகம் மற்றும் அபுதாபி துறைமுகம் ஆகியவையும் கத்தாரில் இருந்து வரும் மற்றும் கட்டாருக்கு செல்லும் கப்பல்களை தாங்கள் அனுமதிக்கப்போவதில்லை என்று தெரிவித்தன.

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை மாலையில், கட்டார் துறைமுகங்கள் மேலாண்மை நிறுவனமான எம்வானி, கத்தாருக்கு வரும் மற்றும் போகும் கப்பல்கள்இ ஐக்கிய அரபு எமிரேட்டுகளை தவிர்த்து ஓமான் வழியாக தற்போது செல்லவுள்ளதாக அறிவித்தது.

இது குறித்து அல்-ஜசீரா ஊடகம் தெரிவிக்கையில்இ ‘இந்த பிராந்தியத்தில் நடந்த அண்மைய நிகழ்வுகளை கருத்தில் கொண்டு, எம்வானி கத்தார் நிறுவனம் மற்றும் அதன் பங்குதாரர்கள், கட்டார் மீது விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளால் நாட்டின் இறக்குமதிகள் மற்றும் ஏற்றுமதிகள் பாதிக்கப்படுவதை குறைக்க, தங்களின் துறைமுகங்கள் மற்றும் கப்பல் போக்குவரத்து செயல்பாடுகள் தொடர உறுதி செய்துள்ளன’ என்று குறிப்பிட்டுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]