கட்சி ரீதியில் நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பில் நடவடிக்கை – மகிந்த அமரவீர

மகிந்த அமரவீர

கட்சி ரீதியில் நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பில் நடவடிக்கை – மகிந்த அமரவீர

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பில் கட்சி என்ற ரீதியில் உரியதொரு தீர்மானம் எடுக்கப்படும் என ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார். நம்பிக்கையில்லா பிரேரணையின் போது வாக்களிப்பது என்பது குறித்து இதுவரையில் எத்தவொரு தீர்மானமும் எடுக்கப்படவில்லையெனவும் தெரிவித்தார்.

எனினும் இது குறித்து விரைவில் தீர்மானிக்கப்படும் எனவும் ஐக்கிய மக்கள் சுதந்திரகூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மகிந்த அமரவீர தெரிவித்தார். இதேவேளை பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பான வாக்களிப்பானது ஸ்ரீலங்கா சுதந்திர கடசிக்கு தீக்கமான சவாலாகும் என பொது ஜன முன்னணி தெரிவித்துள்ளது. அந்த முன்னணியில் தலைவர் ஜீ.எல் பீரிஸ் கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்து இதனைக் குறிப்பிட்டார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]