கட்சி தாவலில் ஈடுபட்ட சுதந்திரக்கட்சியினர் மீண்டும் ஐ.தே.கட்சியோடு இணைவு..

கடந்த 26 ஆம் திகதி புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ நியமிக்கப்பட்டதை அடுத்து கட்சி தாவலில் ஈடுபட்ட சுதந்திரக்கட்சி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான புதிய அரசாங்கத்துடன் இணைந்து கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உச்ச நீதிமன்ற தீர்ப்பை அடுத்து தனது பதவியை மஹிந்த ராஜபக்ஷ இராஜினாமா செய்துள்ள நிலையில், 5 ஆவது முறையாக இன்று ரணில் விக்கிரமசிங்க பிரதமராக பதவியேற்கவுள்ளார்.

இந்நிலையில் கிடைத்த தகவலின் அடிப்படையில், ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த திசாநாயக்க, வீரகுமார திஸாநாயக்க, விஜித் விஜயமுனி, லசந்த அழகியவண்ண, லக்ஷ்மன் செனவிரத்ன, எஸ்.பி. நவீன்ன, விஜயதாச ராஜபக்ஷ, துனேஷ் கங்கந்த ஆகியோர் இணையவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் சுதந்திரக்கட்சி மற்றும் கட்சிதாவலில் ஈடுபட்ட உறுப்பினர்களுக்கு 5 அமைச்சர்கள் மற்றும் இரு இராஜாங்க அமைச்சர்கள் பதவியை வழங்க ஐக்கிய தேசிய கட்சியின் புதிய அமைச்சரவையில் இடம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]