கடை ஒன்றில் திடீரென்று தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஆபாச படம்- அதிர்ச்சி அடைந்த வாடிக்கையாளர்கள்

தொலைக்காட்சியில் திடீரென்று ஆபாச படம் ஒளிபரப்பானதால் பலர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

சிங்கப்பூரில் கடை ஒன்றில் திடீரென இச்சம்பவம் அரங்கேறியுள்ளது.

சிங்கப்பூரின் Changi சாலையில் Seng Kee Black Chicken Herbal Soup என்ற பிரபலமான கடையில் உணவருந்துவதற்கு வாடிக்கையாளர்கள் பலர் வந்து செல்வார்கள்.

மேலும் குறித்த கடையில் இலவச வை-பை மற்றும் வாடிக்கையாளர்கள் பார்ப்பதற்கு தொலைக்காட்சி இருந்துள்ளது.

இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக் கிழமை இரவு தொலைக்காட்சியில் பாடல்கள் ஒளிபரப்பாகி வந்த போது திடீரென்று ஆபாசபடம் ஒளிபரப்பாகியுள்ளது.

இதனைப் பார்த்த பல வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். ஊழியர்களும் பிசியாக இருந்ததால் இதை அவர்கள் கவனிக்காமல் இருந்துள்ளனர்.

அதன் பின் சுமார் 12 வினாடி வீடியோ ஓடிய பின் தொலைக்காட்சியை கடையின் உரிமையாளர் பார்த்து உடனடியாக அணைத்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில்,

தற்போது இருக்கும் தொலைக்காட்சியில் அதிக வசதிகள் உள்ளது. இதனால் இதை யாரோ இண்டர்நெட்டைப் பயன்படுத்தி, மொபைல் போன் மூலம் ஆபாசபடம் ஒளிபரப்பும் படி செய்துள்ளனர்.

தற்போது உடனடியாக வை பை நிறுத்தப்பட்டுள்ளது. இதை எப்படி சரி செய்வது என்பது குறித்து சிந்திப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]