கடுவலையில் கைக்குண்டொன்றுடன் ஒருவர் கைது

கடுவலை – ரணால பிரதேசத்தில் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கைக்குண்டொன்றுடன் நபரொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரை மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பொலிஸ் அதிகாரி ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.