கடும் மழையுடன் கூடிய காலநிலை

இன்று பிற்பகல் முதல் நாட்டின் பல பிரதேசங்களிலும் கடும் மழையுடன் கூடிய காலநிலை நிலவும் என, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

மேல், வடமேல், சப்ரகமுவை, தென் மற்றும் மத்திய மாகாணங்களில் சில இடங்களில் 100 மில்லிமீற்றர் அளவில் மழை பெய்யக்கூடும் என இன்று வெளியிடப்பட்டுள் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, காலியில் இருந்து மட்டக்களப்பு மற்றும் காங்கேசன்துறை ஊடாக மன்னார் வரையான கடற்பிராந்தியங்களில் காற்றின் வேகம் அதிகரித்து காணப்படும்.

குறித்த இடங்களில் சில பகுதிகளில் மணித்தியாலத்துக்கு 70 முதல் 80 கிலோமீற்றர் வரையில் காற்றின் வேகம் அதிகரிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]