கடும் மழையிலும் தொடரும் மனித எலும்புக்கூடு அகழ்வு பணிகள்…

கடும் மழையிலும் தொடரும் மனித எலும்புக்கூடு அகழ்வு பணிகள்…

நாட்டின் பல பாகங்களிலும் தொடர்ச்சியாக மழை பெய்து வருகின்ற நிலையில், 82 ஆவது தடவையாக இன்று (திங்கட்கிழமை) மன்னார் ‘சதொச’ விற்பனை நிலைய வளாகத்தில் மனித எலும்புக்கூடுகள் அகழ்வு பணிகள் இடம் பெற்று வருகின்றது.

பலத்த மழை பெய்து வருகின்ற நிலையில் அகழ்வு செய்யப்படும் மனித புதை குழியானது மழை நீரால் நிரம்பி காணப்பட்டுள்ளது.

எனினும் குறித்த பகுதியில் தேங்கி நிற்கின்ற மழை நீர் இயந்திரத்தின் மூலம் வெளியேற்றப்பட்ட நிலையில் அகழ்வு பணிகள் தடையின்றி முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இருப்பினும் தொடர்சியாக மழை பெய்யும் பட்சத்தில் அகழ்வு பணிகளை மேற்கொள்வதில் பெரும் சிரமம் ஏற்படும் எனவும் கூறப்படுகின்றது.

அத்தோடு, அடையாளப்படுத்தப்பட்ட மேலதிக மனித எச்சங்கள் சிதைவடையும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மன்னார் நகர நுழைவாயில் பகுதியில் அமைந்துள்ள ‘சதொச’ விற்பனை நிலைய வளாகத்தில் கடந்த மார்ச் மாதம் புதிய விற்பனை நிலையத்துக்கான கட்டுமான பணி இடம்பெற்ற போது குறித்த வளாக பகுதியில் அகழ்வு செய்யப்பட்ட மண்ணில் இருந்து மனித எச்சங்கள் கண்டு பிடிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து குறித்த வளாகப் பகுதியில் தொடர்ச்சியாக நீதிமன்றத்தின் அனுமதியுடன் மன்னார் நீதவான் த.சரவண ராஜா முன்னிலையில் விசேட சட்ட வைத்திய நிபுணர் டபிள்யூ.ஆர்.ஏ.எஸ்.ராசபக்ஷ தலைமையில் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இதன்படி கடந்த வார இறுதியில் 154 மனித எலும்புக்கூடுகள் கண்டு பிடிக்கப்பட்டிருந்த நிலையில், அவற்றில் 151 மனித எலும்புக்கூடுகள் அகற்றப்பட்ட நிலையில் தொடர்ச்சியாக அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தகக்து.

கடும் மழையிலும் கடும் மழையிலும் கடும் மழையிலும் கடும் மழையிலும்

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]