கம்பஹாவில் கடும் காற்று

கடும் காற்று

கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளில் நேற்று மாலை வீசிய பலத்த காற்றால் சுமார் 300 வீடுகள் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கொடதெனியாவ முதல் கொடகாவெல வரையான பகுதி வரை மின்சாரம் தடைப்பட்டதாகவும் இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

சுமார் பத்து நிமிடங்கள் வரை வேகமாக காற்று வீசியதால் மரங்கள் முறிந்து விழுந்ததாக  அப்பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

பாதையில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களுக்கும் கடுமையான சேதம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இலங்கை இராணுவத்தின் உதவியுடன் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]