கடும் காற்று வீசக்கூடும்

வடக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் கடும் காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

அத்துடன், வடக்கு மற்றும் மன்னார் வளைகுடா பிரதேசங்களில் மணித்தியாலத்துக்கு 60 முதல் 70 கிலோமீற்றர் வேகத்தில் கடும் காற்று வீசக்கூடும் என அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதனால், புத்தளம் தொடக்கம் மன்னார் ஊடாக காங்கேசன்துறை வரையிலான கடற்பிரதேசம் கொந்தளிப்புடன் காணப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.

எனவே, மீனவர்கள் மற்றும் கடற்பயணங்களை மேற்கொள்ளுவோர் இது குறித்து அவதானத்துடன் இருக்குமாறு இந்த திணைக்களம் அறிவுறுத்தல் விடுத்துள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]