கடும் காற்றினால் 142 இற்கும் மேற்பட்ட வீடுகள் சேதம்

குருநாகல் – வாரியபொல – மாஸ்பொத்த பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வீசிய கடும் காற்றினால் 142 இற்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன.

இன்று அதிகாலை குறித்த பகுதியில் கடும் காற்று வீசியதாகவும் இதன்போது வீடுகளின் கூரைகள் சேதமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இதன்போது, குறித்த வீடுகளில் வசித்த 858 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த நிலையம் குறிப்பிட்டுள்ளது.

பாதிக்கப்பட்டவர்கள் தற்காலிக முகாம்களிலும் உறவினர்களின் வீடுகளிலும் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களுக்கு தேவையான நிவாரண உதவிகளை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]