கடுமையாக சீனாவை விமர்சித்துள்ள வடகொரியாவின்

தங்களது பொறுமையை சோதிக்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டதன் மூலம், சீனாவை விமர்சிக்கும் மிக அபூர்வநடவடிக்கையை வடகொரியாவின் அரசு ஊடகம் எடுத்துள்ளது.கடுமையாக சீனாவை

வடகொரியாவால் அணுஆயுத சோதனை ஆபத்து இருப்பதாக சீன ஊடகங்கள் மிகைப்படுத்துவதாக, அரசால் நடத்தப்படும் கொரிய மைய செய்தி ஊடகம் (கேசிஎன்ஏ ) மே 3-ஆம் தேதியன்று, குற்றம்சாட்டியது.
இதனிடையே, வடகொரியாவில் ஆட்சி மாற்ற நடவடிக்கைகளை செய்வதற்கு அமெரிக்கா முயற்சிப்பதாக வடகொரிய தினசரியான மின்ஜு ஜோசனில் பதிவான ஒரு கட்டுரை எச்சரித்துள்ளது.
சீனா மீதான விமர்சனம்
கேசிஎன்ஏ கட்டுரையை , சீனா மீதான ஆபூர்வமான மற்றும் கடுமையான விமர்சனம் என்று அப்பிராந்திய ஊடகங்கள் கூறியுள்ளன.
சீனா குறித்து நேரடியான மற்றும் அபூர்வமான கண்டனத்தை வடகொரியா தெரிவித்துள்ளதாக தென்கொரியாவின் ஒருங்கிணைப்பு அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.

இதற்கு முன்பு, சீனாவை விமர்சிக்கும் போது ”அண்டை நாடு” என்ற வார்த்தையை மட்டுமே வடகொரியா பயன்படுத்தும்.
பிப்ரவரி மாதத்தில், அமெரிக்காவின் தாளத்துக்கு ஏற்ப சீனா நடனமாடுகிறது என்று கேசிஎன்ஏ சீனா குறித்து குறிப்பிட்டது. ஆனால், அப்போது அண்டை நாடு என்று மட்டுமே சீனாவை கேசிஎன்ஏ குறிப்பிட்டது.
சீன ஊடகங்கள், குறிப்பாக `பீப்பிள்ஸ் டெய்லி` மற்றும் `குளோபல் டைம்ஸ்` செய்தித்தாள்கள், கொரிய மக்கள் ஜனநாயக குடியரசு (டிபிஆர்கே) – சீனா உறவுகளை குறைத்து மதிப்பிடும் வகையில் பொறுப்பற்ற கருத்துக்களை தெரிவித்ததாக கேசிஎன்ஏ மேலும் தெரிவித்தது.
கேசிஎன்ஏ ஊடக வர்ணனைக்கு பதில் கொடுக்கும் வகையில், சீனாவின் தேசியவாத செய்தித்தாளான `டெய்லி குளோபல் டைம்ஸ்` செய்தித்தாளில் வெளியான ஒரு கட்டுரை கருத்து தெரிவிக்கையில், ”வடகொரியாவுடன் பதிலுக்கு பதில் விவாதம் நடத்த வேண்டிய தேவை சீனாவுக்கு இல்லை” என்று தெரிவித்தது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]