முகப்பு News Local News கடவத்தை – கோனஹேன சந்தியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் பெண் ஒருவர் பலி

கடவத்தை – கோனஹேன சந்தியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் பெண் ஒருவர் பலி

கடவத்தை – கோனஹேன சந்தியில் இன்று பிற்பகல் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்து ராகமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெண் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கடவத்தை – ரன்முத்துகல பிரதேசத்தை சேர்ந்த 34 வயதான பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரியவருகின்றது.

குறித்த பெண் கொலை வழக்கொன்றின் சந்தேக நபர் என காவல்துறை தெரிவித்துள்ளது.

கடந்த வருடம் டிசம்பர் மாதம் 30 ஆம் திகதி விவாகரத்தான முன்னாள் கணவரை கொலை செய்த சம்பவம் தொடர்பில் அந்த பெண் மீது குற்றம் சாட்டப்பட்டதை தொடர்ந்து சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் இருந்த அவர், ஒரு மாதத்திற்கு முன்னரே பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

இது குறித்த வழக்கில் முன்னிலையாவதற்காக மகர நீதவான் நீதிமன்றத்திற்கு சென்று உந்துருளியில் மீண்டும் வீடு திரும்பி கொண்டிருந்த வேளையே, அந்த பெண் மீது இந்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com