முகப்பு News Local News கடல் ரீதியில் இலங்கை வந்த ஏதிலிகள் கைது

கடல் ரீதியில் இலங்கை வந்த ஏதிலிகள் கைது

தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு கடல் வழியாக ஆட்கடத்தலில் ஈடுபட்ட இருவர் சிங்கிலி தீவுப்பகுதியில் வைத்து காலை கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றன.

குறித்த தீவுப்பகுதியில் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த வேளை, அங்கு மறைந்திருந்த இருவரை கைது செய்தனர்.

அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுக்கு அமைய அவர்கள் இரண்டு இலங்கை ஏதிலிகளை இலங்கைக்கு அழைத்துச் செல்வதற்காக காத்திருந்தவர்கள் என தெரியவந்துள்ளது.

ஆட்களை கடத்திச் செல்வதற்கு ஒருவருக்கு தலா 25 ஆயிரம் ரூபாய் பணம் அவர்களால் அறவிடுவதாகவும் அவர்கள் வாக்குமூலம் வழங்கியுள்ளனர்.

அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுக்கு அமைய, இரண்டு இலங்கை ஏதிலிகளும் கைதுசெய்யப்பட்டனர்.

இவர்கள் இருவரும் இலங்கையில் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ள தாய் ஒருவரை காண சட்டவிரோதமான முறையில் வரவிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

அவர்கள் இலங்கையில் இருந்து இடம்பெயர்ந்து சென்று தமிழகத்தின் விழுப்புரம் வெளி பகுதியில் வசித்து வந்தவர்கள் என விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com