கடல்சார் பாதுகாப்பு ஜனாதிபதி மைத்திரிபால – பிரதமர் சின்ஷோ அபே இணக்கம்

இந்தோ- பசுபிக் பிராந்தியத்தின் கடல்சார் பாதுகாப்பில் இருதரப்பு ஒத்துழைப்பை ஊக்குவிக்க இலங்கை மற்றும் ஜப்பானுக்கும் இடையில் இணக்கம் ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பான இணக்கப்பாட்டுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவு மற்றும் ஜப்பானிய பிரதமர் சின்ஷோ அபே ஆகியோர் வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஜப்பானுக்குப் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஜப்பானியப் பிரதமர் சின்ஷோ அபேயை நேற்று சந்தித்து பேசியிருந்தார்.

அதன்போது, இரண்டு நாடுகளும் முன்நோக்கிய இருதரப்பு பாதுகாப்பு பரிமாற்றங்களை மேற்கொள்வதற்கும், இந்தச் சந்திப்பில் இணக்கம் காணப்பட்டுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]