கடலுக்கு செல்லும் மீனவர்களுக்கு எச்சரிக்கை

அடுத்து வரும் 48 மணித்தியாலங்களுக்கு கடற்பகுதிகளுக்கு செல்வதை மீனவர்கள் தவிர்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

தற்போது காணப்படும் இடியுடன் கூடிய மழை காரணமாக கடல் மிகவும் கொந்தளிப்பாக காணப்படுவதுடன் காற்றின் வேகமானது சடுதியாக அதிகரித்து வீசக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

மீனவர்களும், கடலில் பயணம் செய்வோரும் இதுகுறித்து அவதானமாக இருக்குமாறு அந்த திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.

இலங்கையைச் சூழவுள்ள வளிமண்டலத்தில் ஏற்பட்ட ஒரு தளம்பல் நிலை ஒரு தாழமுக்கப் பரப்பாக தீவிரமடைந்துள்ள நிலையில், அது மேலும் வலுவடையுமென்று எதிர்பார்க்கப்படுகின்றது.

காலியிலிருந்து ஹம்பாந்தோட்டை, மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை ஊடாக முல்லைத்தீவு வரையான ஆழ்கடல் பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியம் அதிகரித்துள்ளது.