கடலுக்குச் செல்ல வேண்டாம்

எதிர்வரும் 5ஆம் திகதி முதல் 8ம் திகதி வரை கடலுக்குச் செல்ல வேண்டாம் என மீனவர்கள் உள்ளிட்ட கடற்தொழிலாளர்களுக்கு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

அதற்கமைய நாளை மற்றும் நாளை மறுதினம் நாடு முழுவதம் அடை மழை பெய்யும் எனவும் மண் சரிவுகள் தொடர்பில் அவதானத்தை செலுத்துமாறும் பொது மக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

ஊடகங்களில் வெளியாகும் அனர்த்த முகாமைத்துவ தகவல் தொடர்பில் அவதானமாக இருக்குமாறும் கேட்டு கொள்ளப்பட்டுள்ளது.