கடலில் மூழ்கி மாணவன் பலி

மாணவன் பலி

கடலில் மூழ்கி மாணவன் பலி

மட்டக்களப்பு – களுவங்கேணி கடலில் மூழ்கிய நிலையில் மாணவன் ஒருவரின் சடலத்தை தாம் மீட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

ஞாயிற்றுக்கிழமை 18.02.2018 பகல் நண்பர்களுடன் சேர்ந்து இம்மாணவன் கடல் குளிக்க சென்ற வேளையிலேயே கடலலையால் இழுத்துச் செல்லப்பட்ட நிலையில் மூழ்கி மரணமாகியுள்ளார்.

மாணவன் பலி

ராஜா டென்வர் கிருபா (வயது 16) என்ற மாணவனின் சடலம் களுவங்கேணி கடலில் இருந்து மீட்கப்பட்டு செங்கலடி பிரதேச வைத்தியசாலையில் உடற் கூறு பரிசோதனைக்காக கொண்டு வரப்பட்டுள்ளது.
சடலத்தைப் பொறுப்பேற்பதற்காக நுவரெலியாவிலுள்ள பெற்றோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது@ லிந்துல, தலவாக்கலை, நுவரெலியாவை பிறப்பிடமாக கொண்ட இம் மாணவன் க.பொ.த உயர்தரத்தில், தொழில்நுட்பத் துறையில் மட்டக்களப்பில் கல்வி கற்பதற்கு, வந்தாறுமூலையிலுள்ள உறவினர் வீட்டில் தங்குவதற்காக சென்ற ஜனவரி முதலாம் திகதி இங்கு வந்துள்ளார்.

இவ்வேளையிலேயே இம்மாணவன் நண்பர்களுடன் கடலுக்குச் சென்று குளிக்கும் போது மூழ்கி மரணமாகியுள்ளார்.

இச்சம்பவம் பற்றி பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.

மாணவன் பலி மாணவன் பலி மாணவன் பலி மாணவன் பலி மாணவன் பலி

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]