கடலட்டை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்ட யாழ்ப்பாண மீனவர்கள் கைது

கடலட்டை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்ட யாழ்ப்பாண மீனவர்கள் 81பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்

யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு நாகர் கோவில் கடற்பகுதியில் சட்டவிரோதமான முறையில் கடலட்டை பிடிக்கும் தொழிலில் ஈடுபட்டிருந்த தென் பகுதி மீனவர்கள் 81பேரே இவ்வாறு கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த 81 மீனவர்களும் நேற்று கைது செய்யப்பட்டிருந்ததுடன், சட்டவிரோதமான முறையில் கடலட்டை பிடிப்பதில் ஈடுபடுத்தப்பட்ட 28 படகுகள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகின்றது.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள், பருத்தித்துறை கடற்படை முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த பின்னர், சிறிது நேரத்தில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இதன் பின்னர் பருத்தித்துறை மீனவர்கள் எதிர்ப்பினை தெரிவித்திருந்த நிலையில், தென்னிலங்கை மீனவர்கள் கடலட்டை பிடிக்கும் தொழில் செய்வதற்கான அனுமதி உண்டு என யாழ். மாவட்ட கடற்தொழில் நீரியல் வளத்துறை அதிகாரிகள் தெரிவித்ததை தொடர்ந்து மீனவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]