கடற்படையினரின் சுற்றிவளைப்பில் 36பேர் கைது

சட்டவிரோதமாக மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 35 பேர் கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கடந்த சில நாட்களாக முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்புகளின் போது இந்த மீனவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

குதிரைமலை பிரதேசத்தில் 11 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், கிழக்கு கடற்கரை பகுதிகளில் 26 மீனவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக கடற்படை குறிப்பிட்டுள்ளது.

கைதுசெய்யப்பட்ட மீனவர்கள் பயன்படுத்திய படகுகள் மற்றும் தடைசெய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தி பிடிக்கப்பட்ட மீன்களையும் கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட மீனவர்கள், திருகோணமலை மற்றும் புத்தளம் உதவி கடற்றொழில் நீரியலவள திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]