கடற்படைக் கூட்டுப் பயிற்சியில் பங்கேற்க இலங்கை கப்பல்கள் விரைவு

இந்தியக் கடற்படையின் ஏற்பாட்டில் நடக்கவுள்ள “மிலன்-2018” கடற்படைக் கூட்டுப் பயிற்சியில் பங்கேற்பதற்காக இலங்கை கடற்படை இரண்டு போர்க்கப்பல்களை அனுப்பி வைத்துள்ளது.

இலங்கை கடற்படைக்கு சொந்தமான எஸ்.எல்.என்.எஸ் சமுத்ரா, எஸ்.எல்.என்.எஸ் சுரனிமல ஆகிய ஆழ்கடல் ரோந்துக் கப்பல்கள், இந்தக் கூட்டுப் பயிற்சியில் பங்கேற்பதற்காக திருகோணமலை துறைமுகத்தில் இருந்து நேற்றையதினம் புறப்பட்டுச் சென்றன.

27 அதிகாரிகள் மற்றும் 6 பயிற்சி அதிகாரிகள் உள்ளிட்ட 284 கடற்படையினருடன் இலங்கை கடற்படையின் இரு போர்க்கப்பல்களும் எதிர்வரும் 6ஆம் திகதி விசாகப்பட்டினம் துறைமுகத்தைச் சென்றடையும்.

“மிலன்-2018” கூட்டுக் கடற்படைப் பயிற்சி மார்ச் 6ஆம் திகதி தொடக்கி 13ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.

இந்தியப் பெருங்கடலில் சீனாவின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்துவதற்கான இந்தியாவின் ஒரு நகர்வாக இந்தக் கூட்டுப் பயிற்சி கருதப்படுகிறது.

முன்னதாக, சீனாவும் இந்தப் பயிற்சி தமக்கு எதிராகவே ஒழுங்கமைக்கப்படுவதாக குற்றம்சாட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]